கடவுள் கடவுள்.. இந்த கடவுள் என்ற வார்த்தைக்கு தான் எவ்வளவு சக்தி. இந்த பூமி சுற்றுவதே பாதி கடவுளாலும் பாதி பெண்ணாலும் என்று சொல்வதுண்டு. நாத்திகன் என்று பெயர் சூட்டப்பட்டவர்கள் கேட்கும் முதல் கேள்வி. மனிதனை படைத்தவர் கடவுள். ஒத்து கொள்கிறோம். ஆனால் கடவுளை படைத்தவர்கள் யார்?
ஆயிரம் ஆயிரமாய் பதில்கள் ஏற்கனவே கொடுக்கபட்டு இருந்தாலும் இது வரையிலும் நாத்திகனும் சரி ஆத்திகனும் சரி, ஜெய்த்ததாக சரித்தரமே இல்லை இருவரில் ஒருவர். கடவுள் மட்டுமே நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறான்.
என்னுடைய பார்வையில் கடவுள் என்பது என்ன?
நம்பிக்கையும் பயமும் தான் கடவுளின் அர்த்தம்.
சரி எது உண்மை எது பொய் என்று இந்த blog site-ல முழுவதும் அதை பற்றி தான் இருக்க போகிறது. இருந்தாலும் உண்மை எது பொய் எது என்று இந்த பிறவி மட்டும் அல்ல இன்னொரு பிறவியிலும் முடிவு செய்யமுடியாது. அது எப்படி என்பதை தான் இங்கு படிக்க போகிறோம்.