இதுவரை ஒருத்தரால் நம்பமுடியாத விசயங்களே அதியசங்களாக இருந்து வந்து இருந்திருக்கிறது. நம்பமுடியாதா விசயங்கள் இரண்டு விதம் -ஒன்று தெரிந்த விசயங்களில் நம்பிக்கை இல்லாதது காரணம் ஏற்கனவே அத்தகைய நிகழ்வுகளில் எந்த ஒரு ஆதாரமும் நிரூபிக்க படாததே.
மற்றொன்று இதுவரை பார்த்திறாத கேட்டிராதவைகளையே அதிசயங்களாக இருகின்றன மனிதனுக்கு. பார்த்தவைகளில் சில இன்னமும் புதிராத புதிராகவே வைத்து இருக்கிறார்கள், ஒரு சில காரணன்களுக்காக.
இரண்டுமே தெரிதலுக்கும் புரிதலுக்கும் உட்படாமலே இருகின்றன..அதனாலயே அவைகள் அதிசய்ங்களாக இருக்கின்றன. அதை பற்றி தெரிதலும், புரிதலும் இருந்து விட்டால் இந்த உலகில் மட்டும் அல்ல, இந்த அண்ட சராசரிங்களிலும் அதிசய்ஙகளாக கருதபடுவதற்கு ஒன்றுமே இல்லை. அதிசயம் என்ற ஒன்றே தெரியதாதை புரியாததை குறிப்பதற்க்காவே ஏற்படுத்த பட்ட வார்த்தை என்றே தோன்றுகிறது. நான் சொல்வது புரிய வென்டும் என்றால் இந்த பூமியின் இயக்கமும், இந்த அண்டவெளியும் பற்றி ஓரளவு தெரிந்து இருந்தால் மட்டுமே , அறிந்து கொண்டு இருந்தா மட்டுமே முடியும். இல்லை என்றால் இதுவும் ஒரு புதிராத புதிராகவே தோன்றும். இது நான் சொன்னதை பற்றி இன்ருந்தாலும் சரி, இல்லை அது ஆண்டவனை பற்றி இருந்தாலும் சரி.
சொல்லிக் கொள்வதெல்லாம் எதிலும் அதிசயம் கொள்வதற்கு ஒன்றுமே இல்லை, உன் மனசு அந்த அளவுக்கு பறந்து விரிந்து இருந்தால்.....! உன் மனதில் இந்த உலகம் மட்டும் இல்லை , அண்டசராசரிங்களும் அடங்கி இருக்கிறது. இதற்குள்ளே அதிசயங்களும் அடைந்து இருகின்றன என்பது புரிதலாகவே படுகிறது.. ஆள்வதும் அடிமையாய் இருப்பதும் உன் மனதே நிர்ணியக்கின்றன.